தந்தை செல்வா கலையரங்கம்! – யாழ். மத்திய கல்லூரியில் திறந்துவைத்தார் சம்பந்தன்
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தால் யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கலையரங்கத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
கல்லூரி அதிபர் எழில் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் கல்லூரிச் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



