Lead NewsLocalNorth

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மோதல்; 11 சிங்கள மாணவர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 11 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொறியியல்பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் முதலாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அனைவருமே சிங்கள மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading