ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு ஓகஸ்ட் 18இல்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பரந்துபட்ட கூட்டணியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போட்டியிடவுள்ளது.
தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என எதிர்வரும் ஓகஸ்ட் 18ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறும் ஜே.வி.பியின் கூட்டத்திலேயே வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

