பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘கஞ்சிப்பான’ 90 நாட்கள் தடுத்துவைப்பு!
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுனருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அதேவேளை, அவரை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரான் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

