Local

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் சண்.குகரவரதன்!

போலிக் காசோலை மோசடியில் ஈடுபட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியமை போன்ற காரணங்களுக்காக மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான 0 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த கட்சியின் உப தலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading