Local

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல்!

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

இன்று மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் உரைகள் இடம்பெற்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading