Local

அமைச்சரவையில் இரு ‘டம்மி அமைச்சர்கள்’ – விரைவில் பதவி துறப்பு! பாலிதவுக்கு அதிஷ்டம்!

புதிய அரசின் அமைச்சரவையில் இரண்டு ‘டம்மி’ அமைச்சர்கள் இருக்கின்றனர் என்றும், விரைவில் அவர்கள் பதவி துறப்பார்கள் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியைகோரி அடம்பிடிக்கும் ஐ.தே.கவின் உறுப்பினர்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே அவர்கள் பதவியை இராஜினாமா செய்யவுள்ளனர்.

நெருக்கடியான அரசியல் சூழ்நிலையேற்பட்டால் அமைச்சுப் பதவியை தாமாக துறக்க முன்வர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இவ்விருவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

திலக்மாரப்பன,  மலிக்சமரசிக்கிர ஆகிய இருவருமே இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுன்றது. எனினும், இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகிவில்லை.

எனவே, விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் பிரகாசமாக தென்படுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading