Local

மைத்திரி இனிமேல் ஹிட்லராக முடியாது! – குமார வெல்கம காட்டம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். இதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்பினர் மாத்திரம் விதிவிலக்கல்ல.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் தற்போது எதிர்த்தரப்பினராகச் செயற்படுவதே சிறப்பானதாகும். இடைக்கால அரசைப் பொறுப்பேற்று மஹிந்த ராஜபக்‌ஷ தவறு இழைத்து விட்டார் என்பதைப் பலமுறை எடுத்துரைத்தும், சில பதவி மோகம் கொண்டவர்களினால் எமது கருத்து மதிப்பிழக்கப்பட்டது. இனியாவது மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading