LocalNorth

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்வது அவசியமாகும்! – அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டார். இதன்போது அவர், வலிகாமம் வடக்கில் படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்ட அவர், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

இந்தப் பயணம் தொடர்பாக அவர் ‘ருவிட்டர்’ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னமும் காணிகளை விடுவிக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading