Cinema

‘சீறும்புலி’யாக படமாகிறது பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு

‘சீறும்புலி’ படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா.

டுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ‘சீறும்புலி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை ஜி.வெங்கடேஷ் இயக்கி வருகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் வெங்கடேஷ் குமார் கூறுகையில், ‘‘பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் முதலில் எல்லோருக்கும் எழுந்தது. ஆனால், இதற்கு மிகவும் பொருத்தமானவர் நடிகர் பாபி சிம்ஹாதான் என்பது படத்தின் முதல் பார்வை மூலம் தெரியவந்தது என்றார் இயக்குனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை செல்லுலாய்டில் பதிவு செய்யும் துணிச்சல் முயற்சியான ‘சீறும் புலி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் அருகே நிற்கும் ஒரு புலியின் பிடறியில் கைவைத்தபடி கம்பீரமாக, ஏறத்தாழ பிரபாகரனை நினைவுக்குக் கொண்டுவரும் நெருக்கத்துடன் அமர்ந்திருக்கிறார் பாபி சிம்ஹா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading