Local

மோடியின் அழைப்பையேற்று டில்லி பறக்கின்றார் மஹிந்த!

இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவை புதுடில்லிக்கு வருமாறு, இந்திய மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, மஹிந்த ராஜபக்ச அடுத்தமாதம் முதல் வாரத்தில் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, மஹிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் என்று, மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் ஒருவர், கொழும்பு வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ச புதுடில்லிக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமரைச் சந்தித்திருந்தார்.

அரசியல் சதித் திட்டம் தோல்வியில் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading