Lead NewsLocal

சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்! – பொன்சேகா குற்றச்சாட்டு

“போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் நான் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போர் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தமது சுயநல அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டமையினாலேயே இன்று இலங்கை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளில் இருந்து இலங்கை வெளியேற வேண்டுமானால் குற்றவாளிகள் மீதான உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.
.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading