Lead NewsLocal

மஹிந்த மனதார விரும்பினால் மாத்திரமே களத்தில் குதிப்பேன்! – வாசுவின் கருத்துக்கு சமல் பதில்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனதார விரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவேன்.”

– இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

‘ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச இருக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளை, பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை’ என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சமல் ராஜபக்சவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முப்பது வருடப் பயங்கரவாதப் போரிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்ததிலும், நாட்டை மீளக் கட்டியெழுப்பியதிலும் ராஜபக்ச குடும்பத்துக்கு முக்கிய பங்குண்டு. ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முழுத் தகுதியுடையவர்கள். எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனதார விரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading