Lead NewsLocal

மைத்திரி, கோட்டா கொலைச் சதி: நாலக டி சில்வா கைது! நவம்பர் 7 வரை மறியல்!!

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (25) அவர் ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்திலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்யும் சதித் திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இரண்டாம் இணைப்பு)

நவம்பர் 7 வரை
விளக்கமறியல்

கைதுசெய்யப்பட்ட நாலக டி சில்வா கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றிரவு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading