Local

மைத்திரி – மஹிந்த திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைத் தவிர வேறொருவரும் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்து இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டன என்று இரு தரப்பின் வட்டாரங்களிலிருந்தும் அறியமுடிந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு 5 நாட்களே உள்ள நிலையில் நேற்றிரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

நேற்று இந்தப் பேச்சு இடம்பெறுவதற்கு முதல் நாள் தொலைபேசி ஊடாக பல தடவைகள் இருவரும் உரையாடினார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading