Local

மீண்டும் ஜனாதிபதியாகுவது தொடர்பில் கனவிலும் நினைக்கவேகூடாது மைத்திரி! – சம்பிக்க காட்டம்

“மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி ஊடாக நாட்டைச் சீரழித்துவிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளித் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“மீண்டும் பதவிக்கு ஆசைப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இறுதியில் தோல்வியே கிடைத்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் ஜனநாயக தேசிய முன்னணியாக உதயமாகும். ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குபவரே வெற்றியடைவார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading