Local

மன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில் தாய்லாந்தின் வெஹேர விகாரைக்குக் குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தாய்லாந்திலுள்ள அனைத்து பெளத்த விகாரைகளுக்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.

நாட்டில் அரசியல் குழப்பம் தணிந்த நிலையில், அவசரமாக ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தார்.

கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மைத்திரி, ஆன்மீக ரீதியாக வழமைக்குத் திருப்ப எதிர்பார்த்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் தனது பொழுதுகளை தாய்லாந்தில் செலவிட்டு வரும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading