Local

மஹிந்தவின் இளைய மகன் ஜனவரி 24 இல் திருமணம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித சந்தன ராஜபக்ஷ, தனது காதலியான ரற்றியானாவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் செய்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை, ரன்ன ஹோட்டலில் இந்தத் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

வீரகெட்டிய கால்டன் இல்லத்துக்கு வரும் விருந்தினர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமண அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித மற்றும் ரற்றியானா ஆகியோர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோஹிதவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading