ஞானசாரரை விடுவித்தால் மைத்திரிபால இனவாதி! – கூறுகின்றார் செல்வம் எம்.பி.
“நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்கச் சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் எனக் கூறப்படுவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
