Local

இலண்டன் பறந்தார் மைத்திரி! – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்

மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்குப் புறப்பட்டார்.

தனது மகன் தஹம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மூன்று நாட்கள் அவர் இலண்டனில் தங்கியிருப்பார் என்று தெரியவருகின்றது.

முன்னதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை, பதில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நேற்று நியமித்துள்ளார்.

தாம் நாட்டில் இல்லாதபோது, பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவதற்கு ருவன் விஜேவர்த்தனவுக்கு ஜனாதிபதி அதிகாரம் அளித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading