Lead NewsLocal

பதவிக்காலம் குறித்து நீதிமன்றிடம் வியாழன் வினவவுள்ளார் மைத்திரி!

தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கின்றது என்பது பற்றி இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்த தினமான 2015ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது பதவிக்காலம் 2020இல் முடிவடைவதாகக் கருதும் ஜனாதிபதி அதனை விளக்கிக் கூறுமாறே உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கவுள்ளார்.

ஜோதிட ஆலோசனைகளின்படி எதிர்வரும் 11ஆம் திகதி இதற்கான கடிதத்தை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பவுள்ளார் ஜனாதிபதி.

ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் இவ்வருடம் முடிவடைவதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீண்டும் இவ்வாறு விளக்கம் கோரவுள்ளமை அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading