GossipLead NewsLocal

மலையகத்தின் முக்கிய புள்ளி கட்சி தாவல்?

மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விரைவில் கட்சிதாவவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

மாகாணசபையில் உயர்பதவியை வகித்த அவர், சில மாதங்களுக்கு முன்னர் தாய்க்கட்சியிலிருந்து வேறொரு கட்சிக்கு தாவினார். எனினும், உரிய கவனிப்பு இல்லாததால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என கூறப்படுகின்றது.

அத்துடன், அடுத்த மாகாணசபைத் தேர்தலில் எந்தகட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகின்றார் என்பதிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், தாய்க்கட்சிக்கே மீண்டும் திரும்புவதற்கு அவர் முயற்சிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை. எனினும், தேர்தல் அறிவிப்பு வெளியானகையோடு ‘பல்டி’ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading