Local

பொலிஸ் பதிவு – தமிழருக்குச் சிங்களத்தில் விண்ணப்பம்: உடன் நிறுத்துமாறு அமைச்சர் மனோ பணிப்பு

தெஹிவளையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸ் பதிவை உடன் நிறுத்துமாறு, அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு மாவட்ட தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

இனி அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம்.

இதைமீறி பொலிஸ் அதிகாரிகள் உங்கள் இருப்பிடங்களுக்கு வருவார்களாயின்,குறும்செய்தி (077312770) மூலம் என்னிடம் விபரத்துடன் புகார் செய்யவும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading