Local

வௌ்ளவத்தையில் இருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வௌ்ளவத்தையில் இரு வேறு இடங்களில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்சன் வீதிக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 7.15 மணியளவில் வௌ்ளவத்தைப் பகுதியில் இருந்து தெஹிவளை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை 3.50 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்படை முகாமுக்கு அருகில் மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ரங்கனா நவோதினி இனேஷா பெர்னாண்டோ என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வெள்ளவத்தைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading