Local

இந்து-பெளத்த மாநாட்டில் பங்கேற்க மனோ, ஜயவிக்கிரம டில்லி பயணம்!

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் ‘தர்ம – தம்ம மாநாடு’ என்ற தலைப்பில் இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து – பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், புத்த சாசன, வயம்ப அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் இன்று புதுடில்லிக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மாநாடு நாளையும், நாளைமறுதினமும் பீஹார் ராஜ்கிர் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், இந்தியா பவுண்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் விடுத்துள்ள அழைப்பை ஏற்றே இலங்கை அரசில் இந்து, பெளத்த மதங்களுக்குப் பொறுப்பான இரண்டு இலங்கை அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading