Local

சுவீஸ் பெண்ணிடம் பாலியல் சேட்டை – உல்லாச விடுதி ஊழியர் கைது!

சுவீட்சலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற உல்லாச விடுதி ஊழியரை, வெள்ளவாயா பொலிசார் இன்று (24-01-2019) கைது செய்துள்ளனர்.

மேற்படி சுவீட்சலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது கணவனுடன் உல்லாச பிரயாணியாக இலங்கை வந்து, வெள்ளவாயா பகுதிக்கு சென்று, அங்கு உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்தார்.

அவ்வேளையில் அவ் இளம் பெண், தமது உடம்பை “மசாஜ்” செய்து கொள்வதற்கு, ஏற்பாடுகளைச் செய்து தரும்படி, உல்லாச விடுதி முகாமையாளரிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கயை, விடுதி ஊழியர் ஒருவரை “மசாஜ்” செய்வதற்கு, விடுதி முகாமையாளர் அனுப்பியிருந்தார்.

உல்லாச விடுதி ஊழியர் சுவீட்சலாந்து நாட்டு இளம் பெண்ணை “மசாஜ்” செய்யும் தோரணையில், அப் பெண் மீது பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அப் பெண் இனங்காமையினால், விடுதி ஊழியரின் முயற்சி தோல்வியுற்றது.

இம் முயற்சி குறித்து, அப் பெண் தனது கணவனிடம் விடயத்தைக் கூறி, வெள்ளவாயா பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இம் முறைப்பாட்டையடுத்து பொலிசார், உல்லாச விடுதி ஊழியரைக் கைது செய்துள்ளனர். இவ் ஊழியர் விசாரணையின் பின்னர், மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading