Local

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு மஹிந்த – கோட்டாவே பொறுப்பு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு ​அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டும் என பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா ​தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த சந்தியா, மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக தீப்பந்தங்களை ஏந்தியும், காளி தேவி வழிபாட்டிலும் ஈடுப்பட்ட அவர், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்மை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நீதி கிடைக்கவில்லை என்பதால் இந்தப் பிரச்சினையை கடவுளிடம் ஒப்புவிக்கத் தீர்மானித்ததாகவும் இதன்போது கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading