Local

பால்மா விலை அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளது.

ஒரு கிலோகராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.அத்துடன் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

இதற்கமைவாக 860 ரூபாவாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை 920 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் 345 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

பால்மாவிற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்க கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படும் என கால்நடைவள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் பால்மா விலை அதிகரிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.  மக்கள்மீது அரசு, சுமைகளை திணிப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading