World

அம்மா அமுதூட்டி, திலகமிட வாக்களித்தார் மோடி!

அகமதாபாத்திற்கு வாக்களிக்க வருகை தந்த பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் .

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், அகமதாபாத் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார்.
வாக்களிப்பதற்காக குஜராத் வந்த பிரதமர் மோடி, காந்திநகரில் உள்ள  தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். காலில் விழுந்து ஆசி பெற்ற மோடிக்கு அவரது தாயார் ஹீராபென் மோடி நெற்றியில் திலகமிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading