Local

28 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

2019ஆம் அண்டு முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறை 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் தவணைப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரச பாடசாலைகளும் இம்மாதம் 29ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
சகல அரச பாடசாலைகளிலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நேற்று 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தன.
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று சில இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து பாடசாலைகளுக்கு இன்று வரை அதாவது 23 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாதம் 29ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலேயே இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading