Local

நாட்டைப் பிளவுபடுத்த ஐ.தே.க. இடமளிக்காது! – ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு என்கிறார் தலதா

ஐக்கிய தேசியக் கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாகப் பிளவுபட இடமளிக்காது என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பலங்கொடைப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“ஒருமித்த நாட்டுக்குள் மூவின மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியே தீரும்” எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அனுமதியளிக்காத காரணத்தால் இன்று எந்தவொரு குற்றவாளிக்கும் சர்வதேச தண்டனை கிடைத்ததில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கஹவத்தவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading