ஷாபி மீதான ஒரு குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காட்டுக! – சவால் விடுகின்றார் அமைச்சர் ராஜித
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராகவுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் முடியுமானால், ஒன்றை நிரூபித்துக் காட்டுங்கள் எனவும், அதன் பின்னர் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள வைத்யர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா? எனத் தனியார் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்றில் இடம்பெற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வைத்தியர் ஷாபிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள், வைத்தியசாலைப் பணிப்பாளர்களும், டீ.ஐ.ஜிக்கள் மற்றும் ரத்ன தேரர் ஆகியோரே.
நான் அவருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளேனா என்பதை முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்” – என்றார்.

