Lead NewsLocal

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை சபாநாயகர் கருவிடம் கையளிப்பு

 

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையில் 64 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிரேரணை மீதான விவாதத்தை விரைவாக ஆரம்பிக்கும்படி சபாநாயகரிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading