LocalSports

முல்லைத்தீவில் இளைஞர்களுடன் உதைப்பந்தாடி மகிழ்ந்தார் சஜித்!

முல்லைத்தீவு கள்ளப்பாடு உதயம் விளையாட்டு கழக மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உதைப்பந்தாடி மகிழ்ந்தார்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உதயம் நகர் மாதிரி கிராமத்துக்குள் 25 வீடுகளும், ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக வீரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடன் இணைந்து உதைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்வடைந்தார் .

இறுதியாக உதயம் விளையாட்டுக்கழக இளைஞர்களின் குறை நிறைகளையும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading