Local

ரணிலை தனிப்பட்ட ரீதியில் வெறுக்கின்றேன் – மீண்டும் சர்ச்சையைக் கிளப்புகிறார் மைத்திரி!

நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர், அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“225 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று நான் முன்னர் கூறியது, எனது தனிப்பட்ட அரசியல் கருத்து. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இருந்த போதும், நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய போதும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழை வெளியிட முன்னரும், சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தேன்.

இந்த நடவடிக்கைகளால் நான் அரசியலமைப்பை மீறவில்லை. கடாபியுடன் ஒப்பிட்டு வெளியிடப்படும் கருத்துக்கள் கவலையளிக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading