Lead NewsLocal

இலங்கையில் ஆட்சி மாற்றம்: வரவேற்கின்றது இந்திய அரசு! – 52 நாட்களின் பின் கலைந்தது மௌனம்

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 52 நாட்கள் அமைதி காத்து வந்த இந்தியாவின் மௌனம் தற்போது கலைந்துள்ளது.

மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்ற பின்னர், “இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை இந்தியா வரவேற்கின்றது” என இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

“பல்வேறு தரப்பினரின் முதிர்ச்சியான போராட்டங்களின் விளைவால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையுடன் இணைந்து ஒத்துழைத்துப் பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது” என இந்திய வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading