FeaturesLead NewsLocal

மணிவிழா கண்ட என்.வித்தியாதரன்! – ரணில், மஹிந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இந்நாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நடேசபிள்ளை வித்தியாதரனின் 60ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது.

ஊடக நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், ஊடகத்துறை சமூகத்தினர், இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விழா நாயகனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading