Lead NewsLocal

மோடியைச் சந்திக்க கோட்டா மேற்கொண்ட முயற்சி தோல்வி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்படவுள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியாவுக்குச் சென்று அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு கோட்டாபய முயற்சித்தார். அதற்காக நேரம் ஒதுக்குமாறும் கோட்டாபய கோரியிருந்தார். இருப்பினும், இந்தியப் பிரதமர் மோடி, கோட்டாபயவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading