Local

தேர்தலுக்கு ஐ.தே.க. தயாராக வேண்டும்! – நவீன் திஸாநாயக்க கோரிக்கை

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைகளுக்கு முடிவு காண்பதற்காக தேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நீண்ட இழுபறிக்கு மத்தியில் அரசியல் குழப்பநிலை தீர்ந்துவிட்டதான நிலைப்பாடு காணப்படுகின்றது. ஆனால், இது நிரந்தரமில்லை.

புதிய அரசு ஒன்றை அமைக்க வாய்ப்புக் கிடைத்தமையானது எமக்குக் கிடைத்த வெற்றி என எடுத்துக்கொள்ளக்கூடாது.

இன்று கிடைத்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாம் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். எனினும், எவ்வாறான பிரச்சினைகளுக்கும் நாம் முகங்கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம்.

எனவே, பிரதமரான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading