Local

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: காங்கேசன்துறை முகாம் கடற்படை சிப்பாய் கைது!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் பணியாற்றும் 33 வயதுடைய கடற்படைச் சிப்பாயே நேற்றுக் கைதுசெய்யப்பட்டவராவார்.

2008 – 2009 காலகட்டத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரில் மூன்று பேரின் கொலைகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கடற்படைச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading