EastLead NewsLocal

நிந்தவூரிலும் தற்கொலை அங்கிகள் மீட்பு! கிழக்கில் தொடர்கின்றது பதற்றம்!!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பகுதியில், இன்று பிற்பகல் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட நபர்கள் வழங்கிய தகவலுக்கமைய இவை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading