LocalUp Country

மஸ்கெலியா பள்ளிவாசலில் இருந்தும் கத்திகள், வாள்கள் மீட்பு! – ஒருவர் கைது

மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து கத்திகள், வாள்கள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையால் மஸ்கெலியா நகரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த பள்ளிவாசலில் இருந்து 50 கத்திகள், 5 வாள்கள் மற்றும் 3 கோடரிகள் கைப்பற்றப்பட்டன .

பள்ளிவாசலில் உள்ள களஞ்சியசாலையிலயே இவை இருந்துள்ளன. இவை பள்ளிவாசலுக்கு எவ்வாறு வந்தன எனத் தெரியாது என்று கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மஸ்கெலியாப் பொலிஸாருக்கு வாக்குமுலம் வழங்கியுள்ளார்.

குறித்த நபரை நாளை ஞாயிற்றுகிழமை ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியாப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading