LocalNorth

யாழில் கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் சாவு!

உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

யாழ்., பருத்தித்துறை, மந்திகைப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராகப் பணிபுரியும் அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபனகுமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு கறிச் சட்டிக்குள் அவர் தவறி விழுந்துள்ளார்.

அதையடுத்து அங்கிருந்த ஏனைய பணியாளர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading