அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி வெற்றிநடை! 19 மாணவர்கள் 9A !
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில், ஹட்டனு ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
பாடசாலையிலிருந்து இம் முறை 195 மாணவர்கள் பரீட்சைக்குதோற்றியுள்ளனர். இவர்களில் 194 மாணவர்கள் சித்தி அடைந்து, உயர்தரத்தில் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
இதில் தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 02 மாணவர்களும் என மொத்தமாக 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களான பீ.சாய்பிரசாத், பி.மதுஷ்கர், ஜீ.ஹரின் ஜெசிகா, பி.மிதுலாஷினி, எஸ்.கிருஷிகா, ஏ.மதுர்ஷிதா, கே.பவிஷாந்த், எஸ்.வேந்கர், கே.பூஜிதா, கே.சர்மினா, ஏ.எப்.எஸ்.கேசியா, ஜி.தினுஷன், ஆர்.நிவேதன், எச்.மதுஜா, வீ.அபிஜா, எஸ்.ஸ்ரீயாலினி, கே.சாருகேஷ் ஆகியோரும்,
ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவன் கே.பிரனவ், மாணவி ஆர்.பிரவிஷா உள்ளிட்ட 19 மாணவர்கள் 9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
க.கிசாந்தன்
