Local

ஒரு காலில் பரீட்சை எழுதி ‘8A’ எடுத்த மாணவி!

எஹெலியகொடைப் பகுதியில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி, சாதாரண தரப் பரீட்சையில் 8 – ஏ, 1 – பீ சித்திகளைப் பெற்று, பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

எஹெலியகொடை தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவியே இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன், இப் பரீட்சையில் வெற்றியைப் பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி தெரிவித்துள்ளார்.

தனது ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி, இம்மாணவி பரீட்சைக்கு முகம் கொடுத்திருப்பது பெருமைக்குரியதும் பாராட்டுதலுக்குரியதுமாகும். இம்மாணவியின் தாய் மற்றும் தந்தை இதே பாடசாலையில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading