LocalNorth

18 இந்திய மீனவர்கள் 3 படகுளுடன் கைது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.

பருத்தித்துறைக்கு வடமேல் திசையில் 16 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்போது இந்திய மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் வடக்கு கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading