டிப்பர் வாகனம் – மோட்டார் சைக்கிள் சாவகச்சேரியில் நேருக்கு நேர் மோதல்! – ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்
சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
நுணாவில் பொது நூலகத்துக்கு முன்பாக நேற்றிரவு 9.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெறுள்ளது.
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற மீசாலை தெற்கைச் சேர்ந்த சுரேந்திரகுமார் (வயது – 45) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
மீசாலை தெற்கைச் சேர்ந்த க.உதயன் (வயது – 35) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனச் சாரதி சாவகச்சேரிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
