Local

கொஹுவலையில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

கொஹுவல – ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவிலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், குறித்த ஜீப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

38 வயதுடைய மாதிவலை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ரணவக்க சுசில் ருவன் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த 40 வயதுடைய மற்றைய நபர், களுபோவிலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொஹுவலப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading