Lead NewsLocal

காலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது! – ரணிலின் கூற்று குறித்து மாவை கருத்து

“இரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்பது காலத்தைக் கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசியல் தீர்வு குறித்த அரசின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சு நடத்தினேன். இதன்போது எமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு விடயங்கள் மற்றும் வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து பிரதமருக்குத் தெளிவுபடுத்தினேன்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு நடத்துவது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading