மண்டியிட்டுப் பதவியை நாம் பெறவில்லை; சம்பந்தனுடன் முரண்படவும் விரும்பவில்லை! – மஹிந்த அதிரடி
“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் புலம்பிக்கொண்டிருக்கின்றார். சம்பந்தனின் புலம்பல் சரியா? பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சியே சொல்லப்பட்டும். நாங்கள் அவருடன் முரண்பட விரும்பவில்லை.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கை செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே தொடர்ந்து செயற்படுகின்றேன். தற்போது எதிரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை நாம் பெற்றுள்ளோம். அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்மைத் தேடி வந்தது. எவரிடமும் மண்டியிட்டு இந்தப் பதவியை நாம் பெறவில்லை. எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டு அடிமைகளாக இருக்க நாம் இரும்பவில்லை. பலமான எதிர்க்கட்சியாகத் திகழ்வோம்” – என்றார்.
